
posted 25th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
குரங்குகளின் தொல்லை
அம்பாறை மாவட்டத்தில் குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள் விவசாயிகள் பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
தினமும் கொத்தணியாக 300 இற்கும் மேற்பட்ட குரங்குகள் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நடமாடி வருகின்றன. இவ்வாறு அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் சவளக்கடை, நாவிதன்வெளி, நற்பிட்டிமுனை, மருதமுனை, சேனைக்குடியிருப்பு, மணல்சேனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, மத்தியமுகாம், சொறிக்கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அட்டப்பளம், ஒலுவில், வளத்தாபிட்டி, அக்கரைப்பற்று, தம்பிலுவில், பொத்துவில், இறக்காமம், பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட நெற்செய்கைகளை சேதப்படுத்துவதும் கடைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை நாசப்படுத்தி விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பழங்களை உண்டு வீணாக்குவதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இது தவிர இம்மாவட்டத்தில் வீதிகளில் செல்கின்ற பாதசாரிகள் வாகனங்களின் போக்குவரத்தை குரங்கு கூட்டங்களாக வீதியின் நடுவில் சஞ்சாரம் செய்து தடுத்து வருகின்றன. இதனால் பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறு குரங்குகளின் தொல்லையால் நகர வர்த்தகர்கள், விவசாயிகள், பாதசாரிகள் பெரும் சிரமங்களை தினம் தோறும் முகம் கொடுத்து வருகின்றனர்.
இவ்வாறு அதிகரித்து வரும் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)