
posted 22nd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கல்வி அபிவிருத்தியில் கிழக்கு
கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தியில் புதிய ஆளுநர் செந்தில் தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியதாக இருக்கும் என கல்முனை கல்வி வலய அதிபர் சங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய ஆளுநருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து, சங்கத்தின் சார்பில் தலைவர் இஸ்ட் . அஹமட், செயலாளர் ஏ.ஜி.எம். றிசாத் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
கடந்த காலங்களில் இந்திய வம்சாவளிய மக்களின் பாதுகாப்புக் கவசமாக இருந்து செயல்பட்ட சௌவமியமூர்த்தி தொண்டமானின் வழித்தோன்றலில் வந்த செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டமையானது கிழக்கு மாகாண மக்களுக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.
இதன் ஊடாக கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்திகளை சந்திக்க வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறான இளம் தலைவர்கள் எமது பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு மட்டுமல்லாமல் மக்களின் உரிமைகளையும் வென்றெடுப்பதிலும் பாரிய பங்களிப்பை செய்வார்கள்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் செந்தில் தொண்டமானின் பங்களிப்பு அளப்பரியதான அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ஊடாக பாடசாலைக் கல்வியானது உயர்வான இடத்திற்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறன.
இந்நியமனத்தை வழங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு கல்முனை வலய அதிபர் சங்கம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)