
posted 11th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கதிர்காம கந்தனின் விழாவிற்குச் செல்ல காட்டுப்பாதை திறப்பு
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும் பாத யாத்திரிகர்களுக்கான காட்டுப் பாதை எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி திறக்கப்படும். மீண்டும் அது ஜூன் 29 ஆம் திகதி மூடப்படும்
கதிர்காமத்தில் மொனராகலை அரசாங்க அதிபர் மற்றும் அம்பாறை அரசாங்க அதிபர் முன்னிலையில் இடம் பெற்ற கூட்டத்தில் மேற்படி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உகந்தமலை முருகனாலய வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் மற்றும் காட்டுப் பாதை திறப்பு தொடர்பிலான முன்னோடிக் கூட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி பகல் உகந்தை முருகன் ஆலய வளாகத்தில் நடைபெறவிருக்கிறது.
கதிர்காமம் முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜூன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 4 திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய உள்ளது .
அதேவேளை உகந்தை மலை முருகன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா உற்சவம் ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஓகஸ்ட் மாதம் 02ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருக்கிறது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)