
posted 6th May 2023
துயர் பகிர்வோம்
கதிர்காமத்திற்கான பாத யாத்திரை
கதிர்காமத்திற்க்கான பாத யாத்திரை இன்று (06) சனி காலை சந்நிதியான் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி அதன் பின்னர் சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட வழிபாடுகள் மற்றும் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகன் சுவாமிகளின் ஆசீர்வாத்துடன் ஆங்கிருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
செல்வச்சந்நியியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் சுமார் 815 கிலோ மீற்றர் தூரம் ஆகும்.. கதிர்காமத்தை சுமார் 46 நாட்களில் சென்றடையும்.
வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகல ஆகிய மாவட்டங்கள் ஊடாக இந்த யாத்திரை வருடாந்தம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)