
posted 28th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கடற்றொழிலாளர் சங்க சந்திப்பு
அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் உறுப்பினர்களுக்கும். யாழ் மாவட்டத்தின் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) யாழ்ப்பாணத்தில் அம்பாள் கடற்றொழிலாளர் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் அகில இலங்கை பொது மீனவர் சங்க சம்மேளனத்தின் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான நிஹால்கலப்பதி, தேசிய அமைப்பாளரும் தென்மாகாணசபை முன்றாள் உறுப்பினருமான ரத்தினகமகே, காரைநகர் அம்பாள் கடற்றொழில் சங்க தலைவர், சங்க உறுப்பினர்கள் அனைவரும் இதில் கலந்துகொண்டனர்.
இதன்போது இந்திய மீனவர்களது அத்துமீறிய செயற்பாடுகளால் இலங்கை மீனவர்களது தொழில் முதல்கள் அழிவது, இலங்கையில் குறிப்பாக வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)