எமது போராட்ட நியாயமானதே! புரிந்து கொள்ளுங்கள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

எமது போராட்ட நியாயமானதே! புரிந்து கொள்ளுங்கள்

“எமது நிலங்களை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளையே நாம் எதிர்க்கிறோம். எமது போராட்ட நியாயங்களை அஸ்கிரிய, மல்வத்து பீடங்களின் மகாநாயக்கர்கள் புரிந்து கொண்டு - சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எம்முடன் இணைந்து போராட முன்வர வேண்டும். இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் க. சுகாஷ்.

தையிட்டியில் பொதுமக்களின் காணியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள பௌத்த விகாரையை அகற்றக்கோரி நேற்று (22) திங்கட்கிழமை மீண்டும் போராட்டம் நடைபெற்றுது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்த இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், “நாங்கள் பௌத்த விகாரைகளுக்கு எதிராகப் போராடவில்லை. யாழ்ப்பாணம் நாக விகாரைக்கு எதிராகப் போராடவில்லை. எமது நிலங்களை அபகரித்து சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளையே எதிர்க்கிறோம். எமது போராட்ட நியாயங்களை அஸ்கிரிய, மல்வத்து பீட மகாநாயக்கர்கள் புரிந்து கொண்டு, சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எம்முடன் இணைந்து போராட முன்வர வேண்டும் என்றார்.

தமிழரின் காணியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி கடந்த 3ஆம் திகதி முதல் 5ஆம் திகதி வரை தொடர்ச்சியாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எமது போராட்ட நியாயமானதே! புரிந்து கொள்ளுங்கள்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)