
posted 18th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்
'உங்களுக்கு வீடு நாட்டிற்கு எதிர்காலம்' எனும் தொனிப் பொருளின் கீழ் ஆறு லட்சம் ரூபா மானிய அடிப்படையில் மன்னார் மாவட்டத்திலுள்ள கிராம அலுவலகர் பிரிவுகளுக்கு தலா ஒன்று என்ற வீட்டுத் திட்டத்தில் நிர்மானிக்கப்பட்ட வீடுகளுக்கான காசோலை வழங்கும் வைபவம் மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
தேசிய வீடமைப்பு அதிகார சபை முகாமையாளார் ஜே.என். ஜெயச்சந்திரன் தலைமையில் புதன்கிழமை (17) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் மன்னார் பிரதேச செயலாளர் , மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்தின் கீழ் மன்னார் மாவட்டத்திற்கு 153 வீடுகள் கிடைக்கப்பெற வேண்டியிருந்தபோதும் 2020 ஆம் ஆண்டு 67 வீடுகளே நிர்மானிக்கப்பட்டன.
அத்துடன் 2021 ஆம் ஆண்டு நிர்மானிக்கப்பட்ட 148 வீடுகளில் பொருளாதாரப் பிரச்சனைகள் காரணமாக இவ் வீடுகளின் கட்டுமானப் பணிகள் காலதாமக்கப்பட்டன.
இருந்தும் இவைகளில் குறிப்பிடப்பட்ட நிலையில் 76 வீடுகள் நிர்மானிக்கப்பட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வீட்டுக் கட்டுமானப் பணிகளுக்கேற்ற பணமே காசோலையாக வழங்கப்பட்டன.
இதில் மன்னார் பிரதேச செயலகப் பிரிவில் 50 பயனாளிகளுக்கு 89 மில்லியன் ரூபாவும், நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவில் 08 பயனாளிகளுக்கு 16.5 மில்லியன் ரூபாவும் , முசலி பிரதேச செயலகப் பிரிவில் 12 பேருக்கு 22.5 மில்லியன் ரூபாவும் , மாந்தை மேற்கு பிரிவில் 04 பேருக்கு 07 மில்லியன் ரூபாவும் , மடு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 02 பயனாளிகளுக்கு 03 மில்லியன் ரூபாவும் மொத்தம் 76 பேருக்கு 138 மில்லியன் ரூபா இந்த நிகழ்வில் வழங்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்தில் மேலும் சுமார் 1300 பேருக்கு வீட்டுத் திட்டத்துக்கான பணம் வழங்க வேண்டிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)