
posted 23rd May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இரத்த தானம்
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவினை சிறப்பித்து பாடசாலை மண்டபத்தில் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது 50 பேர் குருதியை கொடையாக வழங்கினர். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியினர் இதனைப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த பாடசாலையின் நூற்றாண்டை சிறப்பித்து பல்வேறு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஓர் அங்கமாக அண்மையில் வலயமட்டத்திலான ஆக்கத்திறன் நிகழ்ச்சிகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)