இன‌ம் காண‌ வேண்டும்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இன‌ம் காண‌ வேண்டும்

2005 முத‌ல் ம‌ஹிந்த‌வுக்கு முஸ்லிம்க‌ள் பெரும்பாலும் வாக்க‌ளிக்காமைக்கான‌ கார‌ண‌த்தை ம‌ஹிந்த‌ க‌ட்சியின‌ர் இன‌ம் காண‌ வேண்டும். இவ்வாறு ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சியின் தலைவர் மௌல‌வி முபாற‌க் அப்துல் மஜீட் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் பின்வருமாறு;

2005ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வும், ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வும் போட்டியிட்ட‌ன‌ர். ர‌ணிலுக்கு முஸ்லிம் காங்கிர‌ஸ் ர‌வூப் ஹ‌க்கீம் ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கினார். ம‌ஹிந்த‌வுக்கு ரிசாத் ப‌தியுதீன், அதாவுள்ளா, உல‌மா க‌ட்சி முபாற‌க் மௌல‌வி ஆகியோர் ஆத‌வ‌ளித்த‌ன‌ர். இத்தேர்த‌லில் சுமார் 80 வீத‌மான‌ முஸ்லிம்க‌ள் ர‌ணில் விக்ர‌ம‌சிங்க‌வுக்கே வாக்க‌ளித்த‌ன‌ர். ஆனாலும் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌ வெற்றிய‌டைந்தார்.

அத‌ன் பின் 2010ம் ஆண்டு தேர்த‌லில் ச‌ர‌த் பொன்சேக்காவை ஹ‌க்கீம் ஆத‌ரித்தார். ஏனைய‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் ம‌ஹிந்த‌வை ஆத‌ரித்த‌ன‌ர். இதில் சுமார் 40 வீத‌மான‌ முஸ்லிம்க‌ள் ம‌ஹிந்த‌வை ஆத‌ரித்த‌ன‌ர்.

அத‌ன்பின் 2015ம் ஆண்டு தேர்த‌லில் ஹ‌க்கீமும் ரிசாதும் மைத்திரிபால‌வை ஆத‌ரித்த‌ன‌ர். அதாவுள்ளாவும் முபாற‌க் மௌல‌வியும் ம‌ஹிந்த‌வை ஆத‌ரித்த‌ன‌ர்.
இத்தேர்த‌லில் ம‌ஹிந்த‌ தோற்ற‌துட‌ன் முஸ்லிம்க‌ளின் 20 வீத‌த்துக்கும் குறைவான‌ வாக்குக‌ளே ம‌ஹிந்த‌வுக்கு கிடைத்த‌ன‌.

இவ்வாறு 2005 முத‌ல் ம‌ஹிந்த‌வுக்கு முஸ்லிம்க‌ள் பெரும்பாலும் வாக்க‌ளிக்காமைக்கான‌ கார‌ண‌த்தை ம‌ஹிந்த‌ க‌ட்சியின‌ர் இன‌ம் காண‌ வேண்டும்.

ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ‌வுக்கு முஸ்லிம் வாக்குக‌ள் குறைந்த‌மைக்கான‌ கார‌ண‌ங்க‌ள்.

1. 2005 முத‌ல் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ நின்ற‌ முஸ்லிம் க‌ட்சிக‌ளுக்கு வ‌ச‌தி வாய்ப்புக்க‌ளை செய்து கொடுக்காமை. 2005 முத‌ல் உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வாக‌ "முஸ்லிம் ச‌ம‌ய‌த்த‌லைவ‌ர்க‌ள்" என்ற‌ வ‌கையில் பாரிய‌ பிர‌ச்சார‌ம் மேற்கொண்ட‌து. ஆனால், 2005ல் ம‌ஹிந்த‌ வென்ற‌து முத‌ல் 2015 வ‌ரை இக்க‌ட்சிக்கு எத்த‌கைய‌ வாய்ப்புக்க‌ளும் வ‌ழ‌ங்க‌வில்லை. க‌ட்சிக்கு தொழில் வாய்ப்போ அல்ல‌து ம‌க்க‌ளுக்கு சேவை செய்யும் அதிகார‌மோ வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை.

2. 2006ல் ம‌ஹிந்த‌வை எதிர்த்த‌ முஸ்லிம் காங்கிர‌ஸ், ஐ தே க‌.வின‌ர் ம‌ஹிந்த‌வுட‌ன் இணைந்த‌ போது அவ‌ர்க‌ளுக்கு பெரும் அதிகார‌ங்க‌ளும், வ‌ச‌திக‌ளும் செய்து கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌. இதனால் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வான‌ உல‌மா க‌ட்சியின் பிர‌சார‌த்தை ஏற்ப‌தை விட‌ ம‌ஹிந்த‌வை தேர்த‌லிக் எதிர்க்கும் ஹ‌க்கீமுட‌ன் நின்று விட்டு பின்ன‌ர் ஹ‌க்கீம் ம‌ஹிந்த‌வுட‌ன் சேர்ந்த‌தும் ந‌ம‌க்கு எல்லாம் கிடைக்கும் என்ப‌தை முஸ்லிம் பொது ம‌க்க‌ள் புரிந்து கொண்ட‌ன‌ர்.

3. 2013ம் ஆண்டு ஞான‌சார‌ தேர‌ர் முஸ்லிம்க‌ளுக்கெதிராக‌ இன‌வாத‌ம் பேசிய‌ போது அவ‌ருக்கெதிராக‌ ம‌ஹிந்த‌ அர‌சு எந்த‌வொரு ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌வில்லை. இத‌ன் கார‌ண‌மாக‌ உல‌மா க‌ட்சி ம‌ஹிந்த‌ ஆத‌ர‌விலிருந்து வெளியேறுகிற‌து என்று அறிவித்தும் உல‌மா க‌ட்சியை அழைத்து பேசி தீர்வு காண‌ப்ப‌ட‌வில்லை.

அந்த‌ நேர‌த்திலும் ம‌ஹிந்த‌வின் அமைச்ச‌ர‌வையில் ஹ‌க்கீமும், ரிசாதும் இருந்து கொண்டு முஸ்லிம் ச‌மூக‌த்தின் ம‌த்தியில் வ‌ந்து ம‌ஹிந்த‌வுக்கு எதிராக‌ பேசின‌ர். ர‌வூப் ஹ‌க்கீம் ம‌ஹிந்த‌ அமைச்ச‌ர‌வையில் இருந்து கொண்டே 2012 கிழ‌க்கு மாகாண‌ தேர்த‌லில் ம‌ஹிந்த‌வுக்கெதிராக‌ பேசினார். இத‌ற்கெதிராக‌ எந்த‌ ந‌ட‌வ‌டிக்கையும் எடுக்க‌ப்ப‌ட‌வில்லை.

4. 2019ம் ஆண்டு பொதுஜ‌ன‌ பெர‌முன‌வுட‌ன் ப‌கிர‌ங்க‌மாக‌ ஒப்ப‌ந்த‌ம் செய்த‌து உல‌மா க‌ட்சி. ஆனாலும் அக்க‌ட்சியில் ஒப்ப‌ந்த‌ம் எதையும் பொதுஜ‌ன‌ பெர‌முன‌ நிறைவேற்ற‌வில்லை. கோட்டாப‌ய‌ ராஜ‌ப‌க்ஷ‌ ஜ‌னாதிப‌தி ஆகிய‌ போதும் எதுவும் ந‌ட‌க்க‌வில்லை. அதே போல் ம‌ஹிந்த‌வுக்கு அர‌சிய‌ல் ரீதியில் உத‌வி செய்யாத‌வ‌ர்க‌ளுக்கு பிர‌த‌ம‌ர் ம‌ஹிந்த‌வின் இணைப்பாள‌ர் ப‌த‌விக‌ள் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌.

இத‌ன் மூல‌ம் ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வான‌ க‌ட்சிக‌ளுட‌ன் இருப்ப‌தை விட‌ ம‌ஹிந்த‌வுட‌ன் ந‌டிப்போருட‌ன் இருந்து காரிய‌ம் சாதிக்க‌லாம் என்ப‌து பொது ம‌க்க‌ள் க‌ருத்து.

5. ஜ‌னாஸா எரிப்பு விட‌ய‌த்தில் எம்மை அழைத்து எம‌து க‌ருத்தை கேளுங்க‌ள் என‌ உல‌மா க‌ட்சி, கோட்டாப‌ய‌வுக்கும் ம‌ஹிந்த‌வுக்கும் க‌டித‌ங்க‌ள் எழுதின‌. இவை க‌ருத்திற்கொள்ள‌ப்ப‌ட‌வில்லை. இத‌னால், ம‌ஹிந்த‌வுக்கு ஆத‌ர‌வான‌ க‌ட்சிக‌ள் ம‌ஹிந்த‌ ஆட்சியிலேயே ப‌ல‌வீன‌மாக‌ உள்ள‌ன‌ என்ப‌தை முஸ்லிம் ம‌க்க‌ள் புரிந்து கொண்ட‌ன‌ர்.

6. அர‌ச‌த‌ர‌ப்பு த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள் ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு ஆத‌ர‌வு க‌ட்சிக‌ளை ச‌ரியாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வில்லை

இன்ன‌மும் ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பு இதே நிலையில்தான் உள்ள‌து.

ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி என்ற‌ உல‌மா க‌ட்சியை நிக‌ழ்வுக‌ளுக்கு ம‌ட்டும் அழைப்ப‌து பின்ன‌ர் அப்ப‌டியே கைவிடுவ‌து என்ப‌தே இன்று வ‌ரை ம‌ஹிந்த‌ த‌ர‌ப்பின் செய‌லாக‌ உள்ள‌து. இத்த‌கைய‌ கார‌ண‌ங்க‌ளால் ம‌ஹிந்த‌ ஆட்க‌ர‌வு க‌ட்சிக‌ளின் பேச்சை முஸ்லிம் ச‌மூக‌ம் கேட்காம‌ல் ம‌ஹிந்த‌வை எதிர்ப்போரின் பேச்சையே கேட்கிற‌து.

இன‌ம் காண‌ வேண்டும்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)