
posted 31st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர - Special Offer
ஆழ் துளைக்கிணறு அமைத்து சாதனைபடைத்த இளைஞர்கள்
மிருசுவில் வடக்கு மிருசுவில் பகுதியில் கடந்த சனிக்கிழமை 27/05/2023 அன்று பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி வீழ்ந்து மரணமடைந்த சிறுமியின் வீட்டிற்க்கு மிருசுவில் மக்களால் ஆழ்துளைக் கிணறு ஒன்று நேற்று முன்தினம் 30/05/2023 அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிறுமி வீழ்ந்து மரணமடைந்த பாதுகாப்பற்ற கிணறை இளைஞர்கள் இடித்து மணலால் நிரப்பி மூடிவிட்டார்கள். நேற்று மூன்தினம் திடீர் முடிவெடுத்த இளைஞர்கள் ஊர் மக்களின் நிதி உதவியை பெற்று இக் குழாய்க் கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டமை ஒரு முன்னோடியான செயற்பாடாகும் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்தவர் மிருசுவில் வடக்கு, மிருசுவிலைச் சேர்ந்த 6 வயதுடைய சசிகரன் கிங்சிகா என்ற மிருசுவில் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த சிறுமி ஆவார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)