
posted 26th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆளுநர் செந்தில் சம்பந்தன் சந்திப்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ம. ரமேஸ்வரன் ஆகியோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந் தலைவர் இரா. சம்பந்தனை, அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இதன்போது மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகம் தொண்டமான் காலத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இருந்த வலுவான உறவு குறித்து சம்பந்தன் நினைவூட்டினார்.
இச்சந்திப்பின்போது இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன். இரா. சாணக்கியன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)