அம்பாறை மாவட்டத்தில் நடமாடும் சேவைகள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

அம்பாறை மாவட்டத்தில் நடமாடும் சேவைகள்

அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்கள் ரீதியாக மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வுகளை வழங்கும் பொருட்டு, பிரதேச செயலக ரீதியிலான விசேட நடமாடும் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்படி பொத்துவில் பிரதேச செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன் நடமாடும், சேவையின் போது நீண்ட காலமாகத் தீர்த்து வைக்க்பபடாமலிருந்து வந்த பல்வேறு பொது மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் எட்டப்பட்டன.

இதேபோல் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் தலைமையில், பொலிவேரியன் கிராமத்திலமைந்துள்ள கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.
அத்துடன் அக்கரைப்பற்று பிரதேச செயலக நடமாடும் சேவை பிரதேச செயலாளர் ரி.எம். முஹம்மத் அன்ஸார் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்றது. மேலும் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 16 ஆம் திகதி பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனிபா தலைமையிலும், நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவிற்கான நடமாடும் சேவை எதிர்வரும் 17 ஆம் திகதி பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையிலும் நடைபெறவுள்ளன.

இந்த நடமாடும் சேவைகளில் குறிப்பாகப் பொது மக்களின் தீர்க்கப்படாத காணி தொடர்பான பிரச்சினைகள், பிறப்பு, இறப்பு, விவகாப்பதிவு தொடர்பான பிரச்சினைகள், தேசிய ஆள் அடையாள அட்டை பெறுதல் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய விண்ணப்பம், ஓய்வூதியம் தொடர்பான விடயம், சமூக சேவைகள் தொடர்பான விடயங்கள், அனர்த்த நிவாரண சேவைகள் தொடர்பான விடயங்கள் போன்றவற்றிற்குத் தீர்வுகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் நடமாடும் சேவைகள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)