
posted 5th May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அமரர் திரு. கிறீற் மவுஸின் மாணவர்களுக்கான உதவி
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த அமரர் திரு கிறீற் மவுஸ் கடந்த வருடம் (2022) அமரத்துவம் அடைந்துள்ளபோதும் அவர் இறக்குமுன் வறுமை கோட்டுக்குள் வாழும் மன்னார் மாவட்ட மாணவர்களுக்கு கல்விக்காக மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியில் இவ்வருடத்தின் இரு மாதங்களுக்கான கல்விக்கான கொடுப்பனவு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
வியாழக்கிழமை (04) மன்னார் மாவட்ட துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கத்தில் வைத்து வறுமைக் கோட்டுக்குள் வாழும் உயர் தர மாணவர்களுக்கு பங்குனி, சித்திரை மாத பிரத்தியேக கல்விக்கான உதவி தொகையாக வழங்கப்பட்டது.
இந்த கல்விக்கான கொடுப்பனவு தரம் 4லிருந்து உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு இக் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிதியானது 2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இன்று வரை வழங்கப்பட்டு வருவதாகவும், கிறீற் மவுஸ் இறந்த பின்பும் இவ் உதவியினை தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு கொடுக்கக் கூடியதாக இருக்கும் எனவும் மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்கம் வட்டாரம் தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)