
posted 13th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வெடுக்குநாறி மலையில் கைதானவர்கள் சிறையில் உண்ணாவிரதம்
வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிகோரி வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட எட்டு பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு இன்றையதினம் (13) வவுனியா நீதவான் நீதிமன்று உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில் சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் தமக்கு நீதிகோரி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களை சிறைச்சாலைக்குச் சென்று உறவினர்கள் பார்வையிட்டபோதே குறித்த எட்டு பேரும் இன்று (13) புதன்முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
திலகநாதன் கிந்துஜன், சுப்பிரமணியம் தவபாலசிங்கம், மதிமுகராசா, துரைராசா தமிழச்செல்வன், விநாயகமூர்த்தி ஆகியோரே இன்று (13) முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)