
posted 14th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வீரபத்திரர் சமேதர பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவம்
சங்கரத்தை வீரபத்திரர் சமேதர பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிட்டியம்பதி சங்கரத்தை வீரபத்திரர் சமேத பத்திரகாளி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹோற்சவ கொடியேற்றம் இன்று (14) பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட ஆராதனைகள் இடம்பெற்று வசந்த மண்டத்தில் அருள்பாலிக்கும் வீரபத்திரர் சமேத பத்திரகாளிக்கு விஷேட அபிஷேக, ஆராதனைகள் இடம்பெற்று சுபநேரத்தில் கொடியேற்றம் இடம்பெற்றது.
இதில் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)