
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
விபத்தினால் எரிபொருள் வீதியெங்கும் சிந்தியது
மிருசுவில் பகுதியில் ஏ- 9 வீதியில் டிப்பரும் எரிபொருள் பவுசரொன்றும் மோதி விபத்துக்குள்ளாகின.
இந்த சம்பவம் நேற்று (22) வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதனால் சில மணி நேரம் வீதிப் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது.
இந்த விபத்தில் மோதுண்ட இரு வாகனங்களும் தடம் புரண்டு சரிந்து விழுந்தன.
விபத்து காரணமாக எரிபொருள் பவுசரில் இருந்த எரிபொருள் வீதி முழுவதும் சிந்திக் காணப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை எரிபொருள் தாங்கி முந்தி செல்ல முற்பட்டபோதே எதிரில் வந்த டிப்பருடன் மோதியது.
அதனையடுத்து, சாதுரியமாக செயற்பட்ட இ.போ.ச. சாரதி பஸ்ஸை ஒரமாக நிறுத்தியதால் எவ்விதமான உயிரிழப்புகளும் இடம்பெறவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)