
posted 16th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
ரமழான் பொதிகள் வழங்கல்
நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்கத்தினால் புனித ரமழானை முன்னிட்டு அங்கத்தவர்களுக்கு ரமழான் பொதிகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எம்.ரி.எம். சரீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப், கணக்காளர் சாஜிதா பர்வின், திட்டமிடல் பிரதிப் பனிப்பாளர் ஏ.எம். அலி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது நிந்தவூர் பிரதேச செயலக ஊழியர் நலன்புரி சங்க அங்கத்தினர்கள் சுமார் 200 பேருக்கு ரமழான் பொதிகள் வழங்கப்பட்டன.
ஊழியர் நலன் புரிச் சங்கத்தின் இத்தகைய முன்மாதிரியான செயற்பாடுகள் வரவேற்கத்தக்கதும் எடுத்துக்காட்டனதுமாகும் என நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் அப்துல் லதீப் பாராட்டுத் தெரிவித்தார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)