யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

கடந்த 20.10.2023 அன்று வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற குடும்பஸ்தரை காணவில்லை என காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணம் - கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் என்ற முகவரியில் வசித்து வந்த தேவராசா சூசைதாசன் (வயது 46) என்பவர் கடந்த 20.10.2023 அன்று மேற்படி முகவரியில் உள்ள அவரது வீட்டில் இருந்த வர்த்தக விடயமாக கொழும்புக்கு சென்றார்.

இந்நிலையில் அவர் புறப்பட்டு சென்றதில் இருந்து 5வது நாள் அவரது கைப்பேசி இயங்கவில்லை. இந்நிலையில் அவரது மனைவி இது குறித்து காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 2024.02.01 அன்று முறைப்பாடு பதிவு செய்துள்ளார். எனினும் இதுவரை குறித்த குடும்பஸ்தரிடமிருந்து எந்தவிதமான தொர்பும் அல்லது தொலை பேசி அழைப்பும் வரவில்லை என்று கவலை தெரிவித்தார்ர அவர் மனைவி.

மேலும், யுத்த காலத்தில் குறித்த நபர் கண்ணிவெடியில் சிக்கியதில் அவரது கால் பறிபோயுள்ளது எனபதும் குறிப்பிடத்தக்கது.

யாராவது இவரைப் பற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் 0766348367, 0740910152, 0763934822 என்ற இலக்கங்களில் ஏதாவது ஒரு இலக்கத்திற்கு அழைத்து எமக்குத் தகவல்களை வழங்குமாறு குடும்பத்தவர்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

அத்துடன் வைத்தியசாலை வட்டாரங்களாவது எனது கணவரின் செய்தி தெரிந்தால் எமது நம்பருக்கு தயவுசெய்து அழையுங்கள்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சென்ற குடும்பஸ்தரை காணவில்லை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)