
posted 25th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ். பல்கலைக்கழக மாணவர் கவனயீர்ப்புப் போராட்டம்
இணைந்த சுகாதாரக் கற்கைகள் மாணவர்களின் வேலைவாய்ப்பை உறுதிசெய்யக் கோரி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இணைந்த சுகாதாரக் கற்கைகள் பீட மாணவர்களினால் கவனயீர்ப்புப் போராட்டமானது இன்று (25) திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஆரம்பமாகி பல்கலைக்கழக முதன்மை வளாகத்தில் நிறைவிற்கு வந்த குறித்த கவனயீர்ப்பானது, இணைந்த சுகாதார விஞ்ஞான பட்டதாரிகள் மீதான பாரபட்சமான அசமந்தப் போக்கை உடன் நிறுத்தி அரச நியமனங்களை வழங்கக் கோரி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)