
posted 25th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
யாழ் ஆயர் தலைமையில் திருத்தைலம் மந்திரிக்கும் சடங்கு
திருத்தைலம் மந்திரிக்கும் திருச்சடங்கு திருப்பலி 25.03.2024ஆம் திகதி திங்கட்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.
மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்ற இத்திருப்பலியில் திருத்தைலம் மந்திரிப்பும் யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றும் குருக்களுக்கான குருத்துவ வாக்குறுதிகளை புதுப்பிக்கும் திருச்சடங்கும் நடைபெற்றன.
இத்திருப்பலியில் குருக்கள், துறவிகள், அருட்சகோதர்கள், குருமட மாணவர்கள், இறைமக்களெனப் பலரும் கலந்து செபித்தார்கள்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)