யாழில் உணவகங்களுக்கு சீல்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

யாழில் உணவகங்களுக்கு சீல்

சண்டிலிப்பாய் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த உணவகம் ஒன்றுக்கு, சீல் வைக்குமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், 73 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் உத்தரவிட்டள்ளது.

சண்டிலிப்பாய் பகுதியில் பொது சுகாதார பரிசோதகரான செ. பிரின்சன் தலைமையில் உணவகங்களில் திடீரென சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது குறித்த பிரதேசத்தில் இயங்கிவந்த உணவகமொன்றில் 180 கிலோ பழுதடைந்த ரொட்டிகள், 05 கிலோ இடியப்பம் மற்றும் 08 கிலோ பிட்டு என்பவற்றை பொலித்தீன் பைகளில் கட்டி குளிர்சாதன பெட்டிகளில் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை கண்டறியப்பட்டது. குறித்த உணவகத்திற்கு எதிராக மல்லாகம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உணவக உரிமையாளருக்கு 73ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்த மன்று, உணவகத்தை சீல் வைக்குமாறு உத்தரவிட்டது.

அதேவேளை, பழுதடைந்த இறைச்சி மற்றும் இறால் ஆகியவற்றை களஞ்சியப்படுத்தி வைத்திருந்த உணவக உரிமையாளருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டமும், பழுதடைந்த இறைச்சி ரொட்டியை விற்பனைக்கு வைத்திருந்தமை மற்றும் உணவகத்தை சுத்தமின்றி பேணிய மற்றுமொரு உணவக உரிமையாளருக்கு 33 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மல்லாகம் நீதவான் நீதிமன்று நியாயாதிக்கத்திற்கு உட்பட்ட 06 பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் கடந்த வாரம் முன்னெடுக்கப்பட்ட உணவு கையாளும் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் சுமார் 03 இலட்சம் ரூபாய் தண்டம் அறவிடப்பட்டுள்ள நிலையில், சில உணவகங்களை சீல் வைத்து மூடுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் உணவகங்களுக்கு சீல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)