முன்னேற்றம் அடைந்தவர்கள் வறுமை தெரிந்தவர்களே

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

முன்னேற்றம் அடைந்தவர்கள் வறுமை தெரிந்தவர்களே

வறுமை என்பது எமக்கான உரிமைச் சீட்டு அல்ல. அதிலிருந்து வறுமைக்குட்பட்டவர்கள் நிரந்தரமாக நீங்குவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல். முஹம்மது ஹனீபா தெரிவித்தார்.

அண்மையில் வெள்ளத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட்ட வறுமைக்குட்பட்ட மக்களுக்காக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரனையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் வெள்ளத்தினால் பாதிப்புற்று தெரிவு செய்யப்பட்ட சுமார் 400 குடும்பங்களுக்கு தலா 20,000 ரூபாய் நிதி உதவி வழங்கும் நிகழ்வு அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ்.எம். அஸாருத்தீன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்றைய உலகில் பிறப்பில் ஏழ்மையில் வாழ்ந்தவர்களில் அதிகமானோர் பணக்காரர்களாக உருவாகியுள்ளார்கள். ஏனெனில் அவர்களுக்கு ஏழ்மையின் தன்மை புரியும். அதனால்தான் அவர்கள் முன்னேறிச் செல்கின்றார்கள். அதுபோல் நீங்களும் எதிர்காலத்தில் முன்னேற வேண்டும் என்பதோடு ஏனையவர்களுக்கு இடம் கொடுத்து முன்னேற்றமடையவேண்டும்.

மேலும், இன்றைய காலத்தில் குறிப்பாக வறுமைக்குட்பட்ட சிறுவர்களில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாக்கியுள்ளார்கள். எனவே, அச் சிறுவர்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அவர்களை நற் பிரஜைகளாக மாற்ற நாம் முயற்சி எடுக்க வேண்டும் என்றார்.

முன்னேற்றம் அடைந்தவர்கள் வறுமை தெரிந்தவர்களே

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)