மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகமும் மரகதம் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகமும் மரகதம் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும்

வரலாற்று பிரசித்தி பெற்ற நிந்தவூர் மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மகாசங்காபிஷேகமும் மரகதம் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும் சனிக்கிழமை (16) வெகு சிறப்பாக நடைபெற்றது.

108 சங்காபிஷேக நிகழ்வு ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் ஆலயகுரு சிவசிறி ஹோவர்த்தன சர்மா தலைமையிலான சிவாச்சாரியார்கள் முன்னிலையில் காலை 9.00 மணி முதல் சங்காபிஷேக கிரியைகள் நடைபெற்றன.

முன்னதாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் கலாநிதி கி. ஜெயசிறில் முன்னிலையில் சிவலிங்க அபிஷேகம் இடம்பெற்றது.

இராமகிருஷ்ண மிஷன் மட்டக்களப்பு ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் , அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், ஜனாதிபதி செயலணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் கணபதிப்பிள்ளை மோகன், வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி எம். கோபாலரெத்தினம், ஆலய பரிபாலன சபை ஆலோசகர் உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, ஆலய பரிபாலன சபையின் ஆலோசகரும் உதவிக் கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா தொகுத்து எழுதிய இந்நூல் வெளியீட்டு விழா ஆலய சந்நிதானத்தில் நடைபெற்றது.

ஆசியுரையை ஆலய பிரதம குரு ஸ்ரீ சண்முகமகேஸ்வரக் குருக்கள் வழங்கினார். வெளியிட்டுரையை நூலாசிரியர் வி.ரி. சகாதேவராஜா நிகழ்த்தினார்.

முதல் பிரதியை ஆலய தலைவர் கி. ஜெயசிறில் சுவாமி நீலமாதவானந்தா ஜீக்கு வழங்கி வைத்தார். ஏனைய பிரதிகள் அனைவருக்கும் வழங்கப்பட்டன .

நூலுக்கு அனுசரணை வழங்கிய லண்டனில் வாழும் காரைதீவைச் சேர்ந்த ரி. விஜயலதா ரி. விஜயகரன் சார்பில் அவரது சகோதரர் சி. பிரேமச்சந்திரன் சிறப்பு பிரதியை பெற்றுக் கொண்டார்.

நிகழ்வின் சிறப்பம்சமாக வெளியீடு விழா அடையாளமாக மீனாட்சி அம்மனின் அழகான பெறுமதியான திருவுருவப்படங்கள் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ், கலாநிதி மூ. கோபாலரெத்தினம் மட்டக்களப்பு ஆசிரிய தம்பதியினர் சுகுணமதிஅருள்ராஜா, முதலைக்குடா ஆசிரியை திருமதி நளினி அகிலேஸ்வரன், அதிபர்களான பி. தயாநிதி ( வீரமுனை), செ. சிவயோகராஜா (காரைதீவு) ஆகியோருக்கு வழங்கி வைக்கப்பட்டன. அன்னதானமும் இடம்பெற்றன.

மீனாட்சியம்மன் ஆலய மகா சங்காபிஷேகமும் மரகதம் வரலாற்று நூல் வெளியீட்டு விழாவும்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)