
posted 31st March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மனிதநேய மக்கள் கூட்டணி
ஐக்கிய காங்கிரஸ் கட்சியும் முன்னாள் பிரதி அமைச்சர் பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியும் இணைந்து மனிதநேய மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதியதோர் கூட்டணியை உருவாக்கியுள்ளனர். இக்கூட்டணியில் பதிவு பெறாத 16 கட்சிகளும் இணைந்து கொண்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி "புதிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்" கட்சியும் இக்கூட்டணியில் இணைந்துள்ளது.
இக்கூட்டணியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் தயா சிறி ஜெயசேகரவும், செயலாளராக பிரபா கணேசனும், அவைத் தலைவராக முபாறக் அப்துல் மஜீதும் தேசிய இணைப்பாளராக ரஞ்சித் பீரிசும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சுதந்திரத்துக்கு பின் சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் சமமாக அமர்ந்து உருவாக்கிய முதலாவது கூட்டணி இதுவாகும்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)