மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தினால் "அவளுடைய பலம் - நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் இவ்வருடம் கொண்டாடப்படும் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முதலாம் நிகழ்வாக கலைகள் மற்றும் அரங்க விளையாட்டுகளின் மூலமாக "மகளிர் மனவெழுச்சி ஆற்றுப்படுத்துகை" எனும் 2 தினங்களைக் கொண்ட நிகழ்வானது பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றதுடன், கலந்துகொண்ட மகளிர் சங்க உறுப்பினர்களின் கலைநிகழ்வுகளுடன் இனிதே நிறைவுற்றது.

இந் நிகழ்வில் பிரதேச செயலக பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 45 மகளிர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த நிகழ்வின் வளவாளர்களாக ம. நிரோஷினிதேவி (சமதை பெண்நிலைவாத நண்பிகள் குழு), வி. சிந்துஉஷா (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) மற்றும் ப. ராஜதிலகன் (கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்) ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பான முறையில் நடாத்தியிருந்தனர்.

இந்த நிகழ்வினை பிரதேச செயலக சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் ஒருங்கிணைப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் மகளிர் தின நிகழ்வுகள்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)