
posted 21st March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
மகளிர் தினத்தையொட்டிய நிகழ்வுகள்
மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் மகளிர் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாளர் சட்டத்தரணி திருமதி சிவப்பிரியா வில்வரத்னத்தின் எண்ணக்கரு மற்றும் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளின் வரிசையில் ஐந்தாவது நிகழ்வாக மகளிர் உத்தியோகத்தருக்கான எல்லே விளையாட்டு நிகழ்வானது மகிழுர் பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலக உத்தியோகத்தர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் த. சபியதாசின் மேற்பார்வையில் பயிற்சியளிக்கப்பட்டு இறுதி போட்டி விறுவிறுப்பாக இடம்பெற்றது.
பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி புவனேஸ்வரி ஜீவகுமார் தலைமையிலான அணியினருக்கும், திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வள்ளி வேணுகோபாலன் தலைமையிலான அணியினருக்கும் இடையில் இடம்பெற்ற போட்டி தலா 3 ஓட்டப் பெறுதிகளுடன் சமநிலையில் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் உட்பட பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் கழகங்களின் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)