
posted 12th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பெறாமகளை வன்புணர்ந்தவருக்கு 12 ஆண்டு கடூழியச் சிறைத் தண்டனை
சிறுமியான தனது பெறாமகளை வன்புணர்ந்த சிறியதந்தைக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்தது கிளிநொச்சி மேல் நீதிமன்றம்.
கடந்த 2011ஆம் ஆண்டு பளை பகுதியில் இடம்பெற்ற இந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பான வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றில் நீதிபதி ஏ. எம். எம். சகாப்தீன் முன்னிலையில் தீர்ப்புக்காக நேற்று எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போதே, குற்றவாளிக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் தவறும்பட்சத்தில் 12 மாத கால சிறைத் தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்டவருக்கு 2 இலட்சம் ரூபாய் நட்டஈடு செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 24 மாத கால சாதாரண சிறைத் தண்டனை அனுபவிக்குமாறும் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)