
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பெருமழை தொடங்கிவிட்டது
நாட்டில் நீண்டகாலமாக நிலவிவந்த கடும் வரட்சி, அதிகூடிய உஷ்ண கால நிலைக்கு மத்தியில் கடந்த இரு தினங்களாக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் பெருமழை பெய்து வருகின்றது.
அதிகூடிய உஷ்ணத்தினாலும், வரட்சியினாலும் பாதிக்கப்பட்டிருந்த மக்கள் பெருமழை பெய்யத்தொடங்கியிருப்பதால் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேவேளை முக்கிய விவசாய மாவட்டமான அம்பாறை மாவட்டத்தில் விவசாயிகள் சிறுபோக நெற்செய்கையினை ஆரம்பிப்பதற்கான முஸ்தீபுகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.
நாட்டில் நிலவும் அதிகூடிய வெப்பநிலை காரணமாக நாட்டின் முக்கிய நீர் நிலைகள் வற்றத்தொடங்கியிருப்பதாகவும் நீரை சிக்கனமாக பாவிக்குமாறும் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)