பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்

சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) மற்றும் பெண்களின் அபிவிருத்திக் கூட்டமைப்பு (WDF) என்பன “பெண் தொழில்முனைவோருக்கான வர்த்தகம் மற்றும் சந்தை அணுகல் தொடர்பான திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தினை” வெற்றிகரமாக நிறைவு செய்தமையினை குறிக்குமுகமாக அம்பாந்தோட்டை, காலி, மாத்தறை, மொனராகலை உட்பட இலங்கையின் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மீள்தன்மைகொண்ட நாற்பது பெண் தொழில்முனைவோரை இன்று (06) வீரவிலவில் நடைபெற்ற ஒரு வைபவத்தில் கௌரவித்தன.

USAID மற்றும் WDF ஆகியவற்றிடமிருந்து பயிற்சி மற்றும் வழிகாட்டலைப் பெற்றுக்கொள்ளும் ஒரு வருட கால நிகழ்ச்சித்திட்டத்தினை இப்பெண் தொழில்முனைவோர் நிறைவுசெய்துள்ளனர். தமது நுண் மற்றும் சிறு வணிகங்களை செயற்திறனுடன் முகாமைசெய்வதற்கு அத்தியாவசியமான திறன்களை இப்பயிற்சி மற்றும் வழிகாட்டல் அவர்களுக்கு வழங்கியது. அத்துடன், தமது சந்தைகளைச் சென்றடைவதற்கான திறனை விரிவுபடுத்துதல் மற்றும் உள்நாட்டு மற்றும் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை அணுகுதல் ஆகிய விடயங்கள் தொடர்பான விலைமதிப்பற்ற அறிவினையும் அவர்கள் பெற்றுக்கொண்டனர். பெண்கள் தலைமை தாங்கும் மற்றும் பெண்களுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளை வலுவூட்டுவதிலும், பிராந்தியத்தில் சமூக - பொருளாதார அபிவிருத்தியினை ஊக்குவிப்பதிலும் குறிப்பிடத்தக்க ஒரு மைல் கல்லாக அமெரிக்காவினால் உதவிசெய்யப்படும் இந் நிகழ்ச்சித் திட்டம் விளங்குகிறது.

இந் நிகழ்ச்சித் திட்டத்தினால் உருவான உற்சாகமூட்டும் வெற்றிக் கதைகளில் அம்பாந்தோட்டை, ஹங்கம எனுமிடத்தினைத் தளமாகக் கொண்ட கவிஷ்கா தயாரிப்புகளின் உரிமையாளரான எச்.ஜி. நீலிகா பிரசாந்தியின் கதையும் ஒன்றாகும். தனது அனுபவத்தை நினைவுகூர்ந்த பிரசாந்தி, தனது விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் வணிகத்தினை மேலும் அதிக உயரங்களுக்குக் கொண்டு செல்வதற்காக இம்முன்முயற்சியின் மூலம் தான் பெற்றுக்கொண்ட புதிய திறன்களைப் பயன்படுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டினை வெளிப்படுத்தினார். உற்பத்திக் கொள்ளளவினை அதிகரிப்பதற்காக அதி நவீன தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யும் திட்டங்களுடன், நிதியியல் ரீதியில் தனது தொழில் முயற்சியின் நிலைபேறான தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக முறையான கணக்குப்புத்தக பராமரிப்பு நடைமுறைகளை செயற்படுத்தும் மிகமுக்கிய நடவடிக்கையினை பிரசாந்தி ஏற்கனவே மேற்கொண்டுள்ளார்.

பெண்களின் அபிவிருத்திக் கூட்டமைப்பினால் (WDF) மேற்கொள்ளப்பட்ட ஒரு மதிப்பீட்டைத் தொடர்ந்து கவனமாக வடிவமைக்கப்பட்ட இந் நிகழ்ச்சித் திட்டத்தின் பாடத்திட்டமானது, ஆர்வமுள்ள தொழில்முனைவோரின் தனித்துவமான தேவைகள், அவர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் பயன்படுத்தப்படாத வாய்ப்புகள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தியது. இந் நிகழ்ச்சித் திட்டத்தின் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தினை வலியுறுத்திய திருமதி. பிரசாந்தி “USAIDஇன் உதவியுடன் மேற்கொள்ளப்படும் இம்முன்முயற்சியானது சந்தைப்படுத்தல் முகாமைத்துவம், தொழில் முனைவு மற்றும் நிதிப் பொறுப்புணர்வு ஆகியவற்றில் விலைமதிப்பற்ற அறிவினை எங்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வறிவானது இதற்குமுன்பு எங்களால் அடைந்துகொள்ள முடியாததாக இருந்தது” எனக் குறிப்பிட்டார்.

வர்த்தகம், தேசிய செலவு மற்றும் வருமானம் ஆகியவற்றில் பெறுபேறுகளை துரிதப்படுத்துவதற்கான USAID இன் பங்காண்மை (PARTNER) முன்முயற்சி மற்றும் WDF ஆகியவற்றிற்கிடையிலான ஒத்துழைப்பிற்கான ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவானது, இலங்கையின் வளர்ந்து வரும் SME துறையில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியினை ஊக்குவிப்பதற்கும் பெண்களை வலுவூட்டுவதற்குமான ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இலங்கையின் பொருளாதார நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதில் பெண் தொழில்முனைவோர் வகிக்கும் முக்கிய பங்கினை அழுத்திக்கூறிய USAID இன் பொருளாதார வளர்ச்சி அலுவலகத்தின் பிரதிப் பணிப்பாளரான டெனிஸ் வெஸ்னர் அவர்களுக்கு உதவிசெய்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை மீண்டும் வலியுறுத்தினார். “வெற்றிகரமான தொழில்முனைவோர் கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களையும் ஆதரவையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சகபாடிகளின் ஆதரவு உட்பட, இந் நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக நீங்கள் பெற்றுக்கொண்ட தொடர்புகள், கடினமான காலங்களைக் கடந்து செல்வதற்கு உங்களுக்கு உதவியாக அமையும்” என வெஸ்னர் மேலும் குறிப்பிட்டார்.

இப் பெண் தொழில்முனைவோரின் விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டிய WDF இன் முகாமைத்துவப் பணிப்பாளரான ஸ்ரீயானி மங்கலிக்கா, அவர்களது தொழில்முனைவுப் பயணத்தில் அவர்கள் வெற்றிகொண்ட சவால்களை ஒப்புக்கொண்டார். “ஒரு சிறு வணிகத்தை நடத்துவதென்பது எளிதான விடயமல்ல, குறிப்பாக பல்வேறு பொறுப்புகளைச் சமாளிக்கும் பெண் தொழில்முனைவோருக்கு அது மிகவும் கடினமான விடயமாகும். அசைக்க முடியாத அர்ப்பணிப்பும் மீண்டெழும்தன்மையும் அதற்குத் தேவையாகும்” என மங்கலிக்கா குறிப்பிட்டார். “அவர்களின் உறுதியை பாராட்டுவதுடன் அவர்களின் சமூகங்களில் நேர்மறையான மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான ஊக்கியாக செயற்படும் அதே வேளையில் தமது அபிலாஷைகளை அடைவதற்கான அவர்களது திறனில் நாம் நம்பிக்கையுடன் உள்ளோம்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெண் தொழில்முனைவோரை வலுவூட்டும் நிகழ்ச்சித்திட்டம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)