புனித நோன்பு ஆரம்பம்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

புனித நோன்பு ஆரம்பம்

ஹிஜ்ரி 1445 ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் (இலங்கையின்) பெரும்பாலான பகுதிகளில் தென்பட்டதால் இன்று 12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் புனித நோன்பை அனுஷ்டிப்பதற்கு இலங்கை வாழ் முஸ்லிம்கள் ஆரம்பித்துள்ளனர்.

முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான புனித நோன்பு மாத தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் திங்கட்கிழமை மாலை இடம்பெற்று இதற்கான ஏகமனதான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை புனித நோன்பு ஆரம்பமாவதையொட்டி முஸ்லிம் பிரதேசங்களில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிவாசல்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளடதுடன், இரவு வேளைகளில் மின் அலங்காரங்களுடனும் காணப்படுகின்றன.

அத்துடன் நோன்பு கால இப்தார், மற்றும் ஸகர் நிகழ்வுகள், தராவீஹ் தொழுகை என்பன தொடர்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும் முஸ்லிம் பிரதேசங்களில் ரமழான் மாதத்தையொட்டி வறிய மக்களுக்கான ரமழான் பொதிகள், உதவிகள் வழங்கும் சமூக நல செயற்திட்டங்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிட்டத்தக்கது.

புனித நோன்புமாதத்தை வரவேற்கும் செய்திகளை முஸ்லிம் அமைப்புகள் உட்பட முஸ்லிம் அரசியல் மற்றும் பிரமுகர்களும் வெளியிட்டுள்ளனர்.

புனித நோன்பு ஆரம்பம்

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)