
posted 3rd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி
நெல்லியடி மத்திய கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி கல்லூரி அதிபர் G. கிருஷ்ணகுமார் தலைமையில் சனிக்கிழமை (02) பிற்பகல் 1:30 மணியளவில் ஆரம்பமானது.
இதில் முதல் நிகழ்வாக பிரதமிருந்தினர்கள் சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வீதியிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் இசையுடன் அழைத்துச் செல்லப்பட்டு மங்கள சுடர்கள் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின்றன.
முதல் நிகழ்வாக தேசியக்கொடியினை நிகழ்வின் பிரதம விருந்தினரும், நெல்லியடி மத்திய கல்லூரியின் பிரித்தானியா பழைய மாணவர் சங்க தலைவரும், பிரித்யானியா தமிழ் உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவருமான நடராசா பாக்கியராசா ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து கல்லூரிக் கொடியினை முதல்வர் G. கிருஸ்ணகுமார் ஏற்றிவைக்க நான்கு இல்லங்களின் கொடிகளும் சம நேரத்தில் ஏற்றிவைக்கப்பட்டன.
இல்லங்களின் ஆண் பெண் மாணவர்களின் அணி வகுப்பு இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து விளையாட்டிகளை சம்பிரதாய பூர்வமாக நிகழ்வின் பிரதம விருந்தினரால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்கள் பதக்கங்கள், மையங்கள் என்பவற்றை நிகழ்வின் பிரதமர் சிறப்பு கௌரவ விருந்தினர்கள் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் கல்லூரி பழைய மாணவர் சங்க தலைவர் மருத்துவ கலாநிதி வே. கமலநாதன், யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், முன்னாள் வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் ரவீந்தரன், மாகாண உடற்கல்வித்துறை அதிகாரி, பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)