
posted 29th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நீதிபதிகள், சட்டத்தரணிகளின் பங்கேற்புடன் இடம்பெற்ற இப்தார்
கல்முனை சட்டத்தரணிகள் சங்கம் ஏற்பாடு செய்த விசேட இப்தார் நிகழ்வு நிந்தவூர் தனியார் விடுதியில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி எம்.ஐ. ரைசுல் ஹாதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஜெயராம் ட்ரொக்ஸி, மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி வி. இராமக் கமலன், கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம். சம்சுதீன் சட்டத்தரணிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நோன்பு திறக்கப்பட்டு, தொழுகை மற்றும் துஆப் பிரார்த்தனை என்பனவும் இடம்பெற்றன. சங்கச் செயலாளர் சட்டத்தரணி ரொஷான் அக்தர் நன்றியுரை நிகழ்த்தினார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)