
posted 9th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்ற "மகளிர் தின நிகழ்வு"
சர்வதேச மகளிர் தினத்தினையொட்டி நிந்தவூர் ஆதார வைத்தியசாலை பல்வேறு நிகழ்வுகள் இடம் பெற்றன.
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.பி. அப்துல் வாஜித் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
"பலம் மிக்க பெண்கள் நாட்டின் வளம்" பெண்கள் சமுதாயத்தில் முதலீடு செய்யுங்கள் முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள் எனும் தொணிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)