
posted 21st March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
நகைகள் களவில் சந்தேக நபர்கள் கைது
பல இலட்சம் பெறுமதியான 20 பவுண் நகைகளை திட்டமிட்டு களவாடிய 3 சந்தேக நபர்களை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 5ஆம் கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் ஜன்னல் உடைக்கப்பட்டு உள் நுழைந்தவர்களால் சுமார் 39 இலட்சத்திற்கும் அதிகமான 20 பவுண் நகைகள் களவாடப்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது களவு இடம்பெற்ற வீட்டின் உரிமையாளர்கள் நோன்பு இரவு நேர வணக்க வழிபாட்டிற்காக பள்ளிவாசலுக்கு சென்ற சமயம் பார்த்து 3 சந்தேக நபர்கள் இக் களவுச் செயலை மேற்கொண்டுள்ளனர்.
முறைப்பாடுகளை அடுத்து தீவிரமாகச் செயற்பட்ட சவளக்கடை பொலிஸார் இத்திருட்டில் ஈடுபட்ட சாளம்பைக்கேணியைச் சேர்ந்த 33, 26 ,28, வயது மதிக்கத்தக்க சந்தேக நபர்களைக் கைது செய்ததுடன் சந்தேக நபர்கள் வசம் இருந்து களவாடிய 20 பவுண் நகைகளையும் மீட்கப்பட்டனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)