Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£1.00 Was £84.00

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டு நூல் தொகுதி அறிமுகமும் நூல் வெளியீடும்

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகம் நடாத்திய தமிழ்நாடு ரஹ்மத் பதிப்பகத்தின் ‘ஸிஹாஹ் ஸித்தா’ கிரந்தங்களின் (தமிழ்) மொழிபெயர்ப்புத் தொகுதி அறிமுகமும் ‘மிஷ்காத்துல் மஸாபீஹ்’ (தமிழ்) நூல் வெளியீடும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

சர்வதேசப் புகழ் ஒலிபரப்பாளர் B.H. அப்துல் ஹமீட் அவர்களது நெறியாள்கையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களும் தலைமையுரையை உபவேந்தரும், சிறப்புரைகளை இலங்கை தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீட முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எஸ்.எம்.எம். மஸாஹிர், இந்திய சென்னை மந்தைவெளி ஈத்கா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா கே.எம். இல்யாஸ் ரியாஜி, இந்திய புதுப்பேட்டை மஸ்ஜிதே மஹ்மூதின் தலைமை இமாம் ஹாபிழ் ஏ. பீர்முகம்மது பாகவி ஆகியோரும் ஆற்றினர்.

நிகழ்வில் ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுக்கு நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வழங்கி அறிமுகம் செய்து வைத்தார். அதேவேளை இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிபீடத்துக்கும் நூல்கள் அடங்கிய தொகுதி ஒன்று வழங்கி வைக்கப்பட்டது அத்துடன் தென்கிழக்கு பல்கலைக்கழக அஷ்ரப் ஞாபகார்த்த நூலகத்துக்கும் நூல்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதனை நூலகர் எம்.எம். றிபாவுடீன் பெற்றுக்கொண்டார்.

நூலின் முதற்பிரதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள் பெற்றுக்கொண்டதுடன் அதிதிகளும் எம்.ஏ. முஸ்தபா அவர்களிடமிருந்து பிரதிகளை பெற்றுக்கொண்டனர்.

ரஹ்மத் பதிப்பகத்தின் நிறுவனர் எம்.ஏ. முஸ்தபா அவர்கள் அதிதிகளுக்கு பொன்னாடைகள் போற்றியும் கௌரவித்தார்.

நிகழ்வில் நன்றியுரையை ஏற்பாட்டாளரும் சிரேஷ்ட பேராசிரியருமான றமீஸ் அப்துல்லாஹ் அவர்கள் நிகழ்த்தினார்.

நிகழ்வின்போது பீடாதிபதிகள், பதில் பதிவாளர், பீடாதிபதிகள், பேராசிரியர்கள், நிறைவேற்றுதர உத்தியோகத்தர்கள், கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் அழைக்கப்பட்ட அதிதிகள் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை இந்த நிகழ்வை மிகச் சிறப்புறவும் சிறந்த நெறிப்படுத்தலுடனும் ஏற்பாடு செய்த பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் ரமீஸ் அப்துல்லாஹ்வுக்கு விசேடமாக றஹ்மத் பதிப்பக தவிசாளர் எம்.ஏ. முஸ்தபா பெரும் பாராட்டு தெரிவித்ததுடன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tamil News | Thaenaaram | Obituary Notices | Remembrance Notices | Anniversary Notices | Advertisements |  Medical Articles |

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)