
posted 5th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
திருக்கோணேஸ்வர ஆலய சிவராத்திரி நிகழ்வில் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் பங்கேற்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற 3ஆம் நாள் (04.03.2024) சிவராத்திரி நிகழ்வில் தமிழ்நாடு மைலம் பொம்புரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டு ஆன்மீக சொற்பொழிவை வழங்கினார்.
கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த முதலாம் திகதிமுதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்ச்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)