
posted 1st April 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
உயிர்த்த ஞாயிறு பெருவிழா
இயேசுவின் உயிர்ப்பு பெருவிழா நள்ளிரவுத் திருப்பலி மன்னார் தூய செபஸ்தியார் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) நள்ளிரவு நடைபெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் இமானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக் கொடுக்கப்பட்டது.
திருவிழா திருப்பலி நடந்தபோது ஆலயத்தை சூழ பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.
மன்னார் மறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆலயங்களிலும் நள்ளிரவு திருப்பலி நடைபெற்றதோடு, தேவாலயங்களுக்கு பலத்த பாதுகாப்பும் ஏற்பாடாகியிருந்து.
இதேபோன்று, மன்னார் மாவட்டத்தில் நேற்று காலையும் உயிர்த்த ஞாயிறு தின திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)