
posted 3rd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சிவாஜிலிங்கம் மருத்துவமனையில்
முன்னா் பாராளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நேற்று (02) சனிக்கிழமைஅவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவால் சென்னை - வடபழனி விஜயா மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வந்த அவர் திலீபன் நினைவேந்தல் வழக்குக்காக கொழும்புக்கு வந்திருந்தார். பயங்கரவாத சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட அந்த வழக்கில் கடந்த 28ஆம் திகதி அவரை கொழும்பு மேல் நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதைத் தொடர்ந்து மீண்டும் சென்னை சென்ற அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு நேற்று (02) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)