
posted 7th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
சாணக்கியனை அச்சுறுத்தி தாக்க முற்பட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்
பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தன்னை அச்சுறுத்தியதோடு தாக்க முற்பட்டார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் அவர்களின் அலுவலகம் செல்லும் வழியில் நீர் எவ்வாறு எமது நாட்டின் பிரதமரை சந்திக்கலாம் என்று கூறி தாக்க முற்பட்டார் எனவும் இனவாதிகள் நாட்டில் இருக்கும் வரை எவ்வாறு எமது மக்களுக்கான நீதி கிடைக்கும்? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே உயிருக்கு உத்தரவாதம் இந் நாட்டில் இல்லை. எனது சிறப்புரிமை மீறியமைக்காக பாராளுமன்றத்தில் எனது வாக்குமூலம் பதியப்பட்டது எனக் கூறினார்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)