
posted 9th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கு பல்கலை களகத்தின் பட்டப்பின் கற்கைகள் பீடாதிபதியாக கென்னடி
கிழக்குப் பல்கலைக்கழகப் பட்டப் பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியாகப் பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி பதவியேற்றுள்ளார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் இந்தப் பீடத்தைத் தொடங்குவதற்கான அனுமதிக்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாகி, பெப்ரவரி மாதம் முதலாம் திகதி 2023 ஆம் ஆண்டு வைபவ ரீதியாக இந்தப் பீடம் திறந்துவைக்கப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பீடத்துக்கான பீடாதிபதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, அதற்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று, கிழக்குப் பல்கலைக்கழக மூதவையால் அங்கிகரிக்கப்பட்டுப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதியின் நியமனம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி கடந்த 26 வருடங்களாக பல்கலைக்கழக சேவையில் ஈடுபட்டு வருவதுடன், பல வகையான பதவிகளையும் வகித்துள்ளார். கிழக்குப் பல்கலைக்கழக வரலாற்றில், பட்டப்பின் கற்கைகள் பீடத்தின் முதல் பீடாதிபதி பேராசிரியர் ஜீவரெத்தினம் கென்னடி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)