
posted 7th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் அழைப்பில் பங்கேற்பு
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி நிகழ்வில் போரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் மற்றும் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் விசேட அழைப்பாளராக கலந்துகொண்டனர்.
நேற்றைய (06) தினம் போரூர் ஆதினம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதஸ்தல அடிகளார் அவர்களின் தெய்வீக சொற்பொழிவும், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தெய்வீக கானங்களும் இடம்பெற்றது.
கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கடந்த 02 ஆம் திகதி முதல் சிவராத்திரி நிகழ்வுகள் திருக்கோணேஸ்வரம் ஆலயத்தில் தொடர்சியாக தினமும் மாலை வேளையில் இடம்பெற்று வருகின்றன.
பெருந்திரளான பக்தர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகின்றனர்.
இதேவேளை, எதிர்வரும் 08ஆம் திகதி சிவராத்திரி தினம் வரை இந்நிகழ்வுகள் தொடர்ச்சியாக இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)