
posted 4th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
கம்பியூட்டர்கள் கையளிக்கும் நிகழ்வு
கொமர்ஷல் வங்கியின் CSR அறக்கட்டளை திட்டத்தின் கீழ் கம்பியூட்டர்கள் மற்றும் தளபாடங்களை காத்தான்குடி மில்லத் பெண்கள் உயர்தரப் பாடசாலைக்குக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் திருமதி ஜே.யூ.எம். ஜெஸீமா முஸம்மில்லின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கொமர்ஷல் வங்கியின் கிழக்குப் பிராந்திய முகாமையாளர் ராஜகுலசூரியர் கஜரூபனும், கௌரவ அதிதிகளாக காத்தான்குடி கொமர்ஷல் வங்கிக் கிளையின் முகாமையாளர் லூயிஸ் கரோல்ட் ஜித்தேந்திரன், அக்கரைப்பற்று கொமர்ஷல் வங்கி கிளையின் முகாமையாளர் ஐ.எம். பாயிஸ், காத்தான்குடி கொமர்ஷல் வங்கி கிளையின் உதவி முகாமையாளர் எம்.என்.எம். ரிப்கி ஆகியோரும், விசேட அதிதியாக காத்தான்குடி பிரதேச கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் ஏ.ஜி.எம். ஹக்கீமும் கலந்து கொண்டனர்.
இத்திறப்பு விழாவில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுவின் முன்னாள் செயலாளர் ஷாதுலி ஹாஜியார், பழைய மாணவர் சங்க செயலாளர் திருமதி ஷகீலா அப்துர் ரஹ்மான் மற்றும் பொருளாளர் அஜ்மீர் இத்திட்டத்தின் இணைப்பாளரும் பழைய மாணவர் எம்.எம். பாமிக், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது 10 கணினிகள், அதற்கான தளபாடங்கள் என்பன கொமர்ஷல் வங்கியின் அதிகாரிகளினால் பாடசாலையின் அதிபர் திருமதி ஜே.யு.எம். ஜெஸீமா முஸம்மில்லிடம் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதற்கென கணினி அறையொன்றும் திறந்து வைக்கப்பட்டது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)