
posted 23rd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காது தப்பி ஓடிய முன்னாள் அமைச்சர்
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நெதர்லாந்து அரசின் நான்கு பில்லியன் இலகு கடன் திட்டத்தின் மூலம் அமைக்கப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவு திறப்பு விழா நேற்று(22) பிற்பகல் 3:30 மணியளவில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு திம்பியபோது அங்கிருந்த ஊடகவியலாளர்கள் அவரிடம் கேள்விகளை கேட்க முற்பட்ட போது பதிலளிக்காமல் உடனடியாக வாகனத்தில் ஏறிச் சென்றுவிட்டார்.
ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக தற்போது அருண்சித்தார்த் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அவரிடம் இது குறித்து கேள்விகளை ஊடகவியலாளர்கள் கேட்க முயன்றபோதே அவர் இவ்வாறு பதிலளிக்காது சென்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)