
posted 12th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
உருவச்சிலை திறப்பும், நினைவு மலர் வெளியீடும்
பல்துறை வல்லோன் கலாநிதி. கலாமணி அவர்களின். உருவச்சிலை திறப்பும், பல்கலைக்கழகமாக கலாநிதி கலாமணி எனும் நினைவு மலர் வெளியீடும்....!
பல்துறை வல்லோன் கலாநிதி. கலாமணி அவர்களின். உருவச்சிலை திறப்பும், பல்கலைக்கழகமாக கலாநிதி கலாமணி எனும் நினைவு மலர் வெளியீடும் இன்று (11) திங்கட்கிழமை காலை. 10:30 மணி அளவில் இடம்பெற்றது.
கொழும்பு பல்கலைக்கழக விரிவுரையாளர் பௌநந்தி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முதல் நிகழ்வாக கலாநிதி. கலாமணி அவர்களின் உருவப்படத்திற்கான மலர் மாலையை திருமதி கலாமணி, அவர்களது பிள்ளைகள் ஆகியோர் அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தியது தொடர்ந்து உறவினர்கள் நண்பர்கள், அவரது மாணவர்கள் என பலரும் மலரஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து கலாநிதி கலாமணி அவர்களுடைய உருவச்சிலையை ஓய்வு நிலை தமிழ் துறை பேராசிரியர் எஸ் சிவலிங்கராஜா திரை நீக்கம் செய்து வைத்து கல்வெட்டையும் திரை நீக்கம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பல்கலைக்கழகமாக கலாநிதி கலாமணி எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு. இடம் பெற்றது.
இதில் கலாநிதி கலாமணி அவர்களின் நினைவுரைகளை யாழ்ப்பாண பல்கலைக்கழக தமிழ் துறை பேராசிரியர் சிவலிங்கராஜா, யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர் இராஜேஷ் கண்ணா, பேராசிரியர் மா கருணாநிதி. கலாநிதி நித்திலவர்மன், ஓய்வு பெற்ற வங்கியின் முகாமையாளர். கிருஷ்ணானந்தன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி முன்னாள் பீடாதிபதி கலாநிதி பரமானந்தா உட்பட பலரும் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில். யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அவரது மாணவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலரும் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வு கலாநிதி கலாமணி அவர்களுடைய 31ஆம் நாள் நினைவையொட்டி இன்று இடம் பெற்றது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)