
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
உண்ணாவிரத மீனவர்களின் கவலை
எமது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரோ, எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரோ வருகை தரவில்லை. இது எமக்கு மிகுந்த வேதனை அளிக்கின்றது. இவ்வாறு இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியைக் கண்டித்து இந்திய துணைத் தூதரகம் அண்மையாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் தெரிவித்தனர்.
நேற்று வியாழன் (21) செய்தியாளர்கள் அவர்களை சந்தித்தபோதே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
மேலும், நடைமுறைச் சாத்தியமற்றதெனத் தெரிந்தும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அழைப்புவிடுக்கா விட்டாலும் தாமாக ஒட்டிக்கொண்டு ஊடகங்களுக்கு அறிக்கைகளும் தகவலும் தெரிவிப்பார்கள். இவர்கள், எமது இந்த வாழ்வாதார பிரச்சினைக்கு மட்டும் ஆதரவுக்கரம் நீட்டவில்லை என்பது மிகவும் வேதனையாக உள்ளது என்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)