
posted 19th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
இந்திய மீனவர் அத்துமீறலை எதிர்த்து யாழில் உணவு தவிர்ப்புப் போராட்டம்
இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து யாழ்.மாவட்ட மீனவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
யாழ். மாவட்ட கிராமிய கடற்தொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ். மாவட்ட கடற் தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து இன்று (19) காலை முதல் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை 9:30 மணிக்கு மருதடி சந்தியில் இருந்து பேரணியாக யாழ். இந்திய துணைத் தூதரகம் நோக்கி சென்ற மீனவர்கள் துணைத் தூதரகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் பொலிஸார் அங்கிருந்து வெளியேற்றியதை அடுத்து யாழ் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)