
posted 5th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, ஆழியவளை சி.சி.த.க. வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலை மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.
இசை வாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டு பாடசாலை அதிபர் கந்தசாமி சிவனேசன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கணினிப் பொறியியலாளரும் டெக்கொரின் சொலூசன் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அரியகுமார் சிறிகரன் கலந்துகொண்டார்.
சிறப்பு விருந்தினராக மருதங்கேணி கோட்டக் கல்விப் பணிப்பாளர் செல்லத்துரை ஸ்ரீஇராமச்சந்திரனும், கெளரவ விருந்தினர்களாக வடமராட்சி வலய உடற்கல்வி சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் கிருஷ்ணபிள்ளை பாக்கியநாதனும், முல்லைத்தீவு செம்மலை மகா வித்தியாலய ஆசிரியர் வாரித்தம்பி பிரபாகரனும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் சரவணமுத்து சிதம்பரநாதனும் கலந்துகொண்டனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றிக் கோப்பைகளும் விருந்தினர்களால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டன.
மேற்படி நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)