
posted 22nd March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
அம்பாறை மாவட்ட செயற் குழு கட்சி தலைவருடனான சந்திப்பு
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற் குழுவின் உயர்பீட உறுப்பினர்களுக்கும், கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் றிஷாட் பதியுத்தீன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றது.
இதன் போது அம்பாறை மாவட்ட கட்சி சார் அரசியல் முன்னெடுப்புக்கள், எதிர் கொள்ளவுள்ள தேர்தல்கள் குறித்தான செயற்பாடுகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)