வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆலய பூசகர்

பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்

உறவுகளின் துயர் பகிர்வு

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆலய பூசகர்

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரதான பூசகர் த. மதிமுகராசா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட சமயம் பொலிஸாரினால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 19ஆம் திகதி வரை வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த எட்டுப் பேரையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்று திங்களன்று உத்தரவு பிறப்பித்தது.

விடுதலையான வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 5 நாட்கள் இவர் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெடுக்குநாறிமலை ஆலய பூசகர்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)