
posted 18th March 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
வவுனியாவில் யானை தாக்கி முதியவர் பலி
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த முதியவர் நேற்று (17) ஞாயிறு மாலை வீதியில் சென்றுகொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த யானை அவரை தாக்கியுள்ளது.
இதன்போது படுகாயமடைந்த முதியவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் செட்டிகுளம் - மருதமடு பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை செட்டிகுளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)